நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

Update: 2021-09-15 06:30 GMT

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில்,  அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். 

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நாமக்கல் அண்ணா சிலை அருகில் அண்ணா பிறந்த நாள் விழா நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளரும், திமுக ராஜ்யசபா வேட்பாளருமான ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, மாநில திமுக நிர்வாகிகள் நக்கீரன், கைலாசம், ராணி, தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்தன், கிழக்கு நகர செயலாளர் பூபதி, மேற்கு நகர செயலாளர் சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள் பழனிவேல், பாலு, திமுக பிரமுகர்கள் டாக்டர் மாயவன், சரவணன், ஈஸ்வரன், ராஜகோபால் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News