நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் குழு தலைவருக்கு பாராட்டு விழா

கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்திய நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் குழு தலைவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

Update: 2023-11-13 06:53 GMT

நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற, பாராட்டு விழாவில் ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி பேசினார்.

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை சிறப்பான முறையில் நடத்திய, அறங்காவலர் குழு தலைவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

நாமக்கல் நகரில் பிரசித்திபெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு இந்தியா மட்டுமல்லமாது வெளிநாடுகளில் இருந்தும், தினசரி ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். சுமார் 1000 ஆண்டுகளுக்குப்பிறகு முதல் முறையாக ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் கடந்த 1996ம் ஆண்டு கும்பாபிசேகம் நடைபெற்றது. பின்னர் 2,009ம் ஆண்டு மீண்டும் இரண்டாவது முறையாக கும்பாபிசேகம் நடத்திப்பட்டது.

14 ஆண்டுகளுக்குப் பிறகு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிசேக விழா கடந்த நவ.1ம் தேதி நடைபெற்றது. தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், நாமக்கல் எம்.எல்.ஏ. ராமலிங்கம் மற்றும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி தலைமையில், கும்பாபிசேக விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிசேக விழாவை சிறப்பாக நடத்தி முடித்த, அறங்காவலர் குழு தலைவலரும், டிரினிடி மகளிர் கல்லூரி தலைவருமான நல்லுசாமிக்கு, நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது. கல்லூரி செயல் இயக்குனர் அருணா செல்வராஜ் தலைமை வகித்தார். அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். கல்லூரி முதல்வர் லட்சுமிநாராயணன், உயர்கல்வி இயக்குனர் அரசு பரமேஸ்வரன், கல்லூரி நிர்வாக அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News