நாமக்கல் மாவட்ட அமமுக மகளிரணி செயலாளர் திமுகவில் ஐக்கியம்

நாமக்கல் மாவட்ட அமமுக மகளிர் அணி செயலாளர் திமுகவில் இணைந்தார்.

Update: 2021-07-07 11:00 GMT

நாமக்கல் மேற்கு மாவட்ட அமமுக மகளிர் அணி செயலாளர் ரேனுகா, வண்டிநத்தம் ஊராட்சி செயலாளர் தங்கவேல் ஆகியோர், தங்களது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இந்து விலகி, நாமக்கல் மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் வக்கீல் இளங்கோவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட அமமுக மகளிர் அணி செயலாளர் திமுகவில் இணைந்தார்.

நாமக்கல் மேற்கு மாவட்ட அமமுக மகளிர் அணி செயலாளராக பணியாற்றி வந்தவர் ரேனுகா. இவரும், எலச்சிப்பாளையம் ஒன்றியம் வண்டித்தம் ஊராட்சி அமமுக செயலாளரான தங்கவேல் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இருந்து விலகினர். அவர்கள் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக முன்னாள் பொறுப்பாளர் வக்கீல் இளங்கோவனை சந்தித்து தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். அவர்களுக்கு வக்கீல் இளங்கோ பொன்னாடை போர்த்தி வவேற்றார். திமுக மாவட்ட கலை இலக்கியப்பிரிவு துணை அமைப்பாளர் பிரபு உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News