பொன்விழா நகர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நாளை துவக்கம்

நாமக்கல் பொன்விழா நகர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா, நாளை துவங்குகிறது.

Update: 2022-04-16 09:45 GMT

நாமக்கல் திருச்சி ரோடு பொன்விழா நகர் குடியிருப்பில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தாண்டு 23ம் ஆண்டு திருவிழா நாளை 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவங்குகிறது.

இதனை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு கம்பம் வெட்டப் புறப்படுதல், மதியம் ஒரு மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். மாலை 5.30 மணிக்கு எல்லையம்மன் கும்பிடுதல், காப்புக்கட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 18ம் தேதி திங்கள் கிழமை முதல் 23ம் தேதி சனிக்கிழமை வரை மாலை 7 மணிக்கு கட்டளைதாரர் சார்பில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது.

வரும் 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு தேரில் கலசம்வைத்தல், கரகம் பாலித்து சக்தி அழைத்தல். 6.30 மணிக்கு அம்மனுக்கு மலர் அலங்காரம் நடைபெறும். இரவு 7.30 மணிக்கு வடிசோறு படைத்தல், இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜை, அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் முத்துமாரியம்மன் திருவீதி உலா நடைபெறும். இரவு 8.30 மணிக்கு கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெறும். காலை 11 மணிக்கு மாவிளக்கு பூஜை செய்தல், மதியம் 3.30 மணிக்கு பூக்குழி இறங்குதல் நடைபெறுகிறது.

வரும் 26ம் தேதி காலை 8.30 மணிக்கு தேரில் மாரியம்மன் ரதம் ஏறுதல், காலை 9 மணிக்கு கோவிலில் பொங்கல் வைத்து பூஜை செய்தல், மாலை 5 மணிக்கு திரு ஊஞ்சல் வைபவம் நடைபெறுகிறது. 27ம் தேதி காலை 6 மணிக்கு முத்துமாரியம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டுதல், அம்மன் குடிபுகுதல், காலை 11 மணிக்கு கம்பம் பிடுங்கி ஆற்றில் விடுதல் நடைபெறும்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக்குழு மற்றும் ஊர்ப்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News