பிஎஸ்என்எல் ஊழியர் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியரின் மனைவியை கொலை செய்த வழக்கில் சேலத்தை சேர்ந்த வாலிபருக்கு, நாமக்கல் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Update: 2022-03-30 14:00 GMT

பள்ளிபாளையம் ஒட்டமெத்தையைச் சேர்ந்தவர் சுந்தரம் (67). இவர் பிஎஸ்என்எல்லில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி மதியம், பள்ளிபாளையம் அகே பிள்ளையார்காட்டூர் பகுதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார்.

அப்போது வீட்டுக்குள் இருந்து 2 மர்மநபர்கள் அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அவரது மனைவி சாந்தகுமாரி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். வீட்டு பீரோவில் இருந்து ரூ. 10 ஆயிரம் ரொக்கம், சாந்தக்குமாரி அணிந்திருந்த தாலி, தோடு உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக பள்ளிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சேலம் அமானி கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (எ) ராஜ் (34), அவரது தம்பி ரமேஷ் (31) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் வழக்கின் மீது தீர்ப்பள்ளிக்கப்பட்டது. தீர்ப்பில்,  குற்றம்சாட்டப்பட்ட கோவிந்தராஜூக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அவரது தம்பி ரமேஷ் வழக்கு விசாரணையின்போது இறந்து விட்டார் என்பதால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

Tags:    

Similar News