மோகனூர் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா: நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

மோகனூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2022-04-25 11:45 GMT

மோகனூர் மாரியம்மன் கோயில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இரண்டு ஆண்டுகளுக்கு பின், மாரியம்மன் கோவில் திருவிழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும், குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக, இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு கோயில் திருவிழா கடந்த 11ம் தேதி காப்பு கட்டுடன் துவங்கியது. தொடர்ந்து, பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தக்குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து கம்பத்துக்கு ஊற்றி வழிபாடு செய்தனர். தீக்குண்டம் இறங்கும் விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி ஊர்வலமாக வந்தனர். பின்னர், கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர், மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

Tags:    

Similar News