நாமக்கல் : மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 33,953 பேர் பயன்

நாமக்கல் மாவட்டத்தில் 4ம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் ஒரு நாளில் 33,953 பேருக்கு கொõரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Update: 2021-10-04 02:00 GMT

கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 4ம் கட்ட கெரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் நேற்று நடைபெற்றன. நாமக்கல் மாவட்டத்தில் 58 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அவ்வகையில், அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், அரசு பள்ளிகள், கோயில்கள் உள்ளிட்ட 440 நிலையான முகாம்கள், 21 நடமாடும் முகாம்கள் என மொத்தம் 461 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. சுகாதாரத்துறை, வருவாய்த்துறையினர், உள்ளாட்சி பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 4,400 பணியாளர்கள் தடுப்பூசி பணியில் ஈடுபட்டனர்.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆதார் அட்டை பதிவு செய்து பொதுமக்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி கோவாக்சின் மற்றும் கோவி ஷீலட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நடக்க முடியாதவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. ராசிபுரம் பகுதியில் நடைபெற்ற முகாம்களை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் சென்று ஆய்வு செய்தார். 4ம் கட்ட சிறப்பு முகாமில் ஒரே நாளில் மொத்தம் 33 ஆயிரத்து 953 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News