நாமக்கல் பகுதியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்: பொதுமக்கள் ஆர்வம்

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Update: 2021-09-12 09:15 GMT

நாமக்கல் பகுதியில் நடைபெற்ற கொரோனா மெகா தடுப்பூசி முகாம்களில் ர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்ட பொதுமக்கள்.

கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றும் வகையில், தமிழக அரசின் சார்பில் இன்று 12ம் தேதி மாநிலம் முழுவதும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 620 நிலையான குழுக்கள் மற்றும் 80 நடுமாடும் குழுக்கள் மூலம் 700 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.

முகாம்களில் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசிகள் சுமார் ஒரு லட்சம் பேருக்கு செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து அரசு மற்றும் தன்னார்வலர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், மாவட்ட பார்வையாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இயக்குனர் வீரராகவராவ் ஆகியோர் மேற்பார்வையில் முகாம்கள் நடைபெற்றன.

Tags:    

Similar News