குமாரபாளையம் நகர தி.மு.க. 13-வது வார்டு சார்பில் ஐம்பெரும் விழா
குமாரபாளையம் 13வது வார்டு தி.மு.க. சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது.;
குமாரபாளையம் 13வது வார்டு தி.மு.க. சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது.
திமுக சார்பில் ஒவ்வொரு மாவட்டம் மற்றும் முக்கிய நகரங்களில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகரம் 13வது வார்டு தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா, அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு தங்கப்பதக்கம், ஸ்கூல் பேக் வழங்கும் விழா, ஏழை மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கட்டணம் வழங்கும் விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. வார்டு செயலரும், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளருமான மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக நகராட்சி தலைவரும், வடக்கு நகர செயலருமான விஜய்கண்ணன் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு தங்கப்பதக்கம், ஸ்கூல் பேக், கல்வி கட்டணம், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். முன்னாள் கவுன்சிலர் விஸ்வநாதன், வார்டு அவைத்தலைவர் ஆறுமுகம், பெற்றோர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.