புதுச்சத்திரத்தில் 'வருமுன் காப்போம்' திட்ட மருத்துவ முகாம்

புதுச்சத்திரத்தில் ‘வருமுன் காப்போம்’ திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2022-04-24 00:00 GMT

புதுச்சத்திரத்தில் நடைபெற்ற, வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் கண்காட்சியை, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்து. நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.

வட்டார மருத்துவ அலுவலர் சுதா தலைமையில், அனைத்து துறை டாக்டர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து, சிகிச்சை அளித்தனர். புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் கவுதம், ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தி, துணைத் தலைவர் ராம்குமார், குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News