நாமக்கல்: உள்ளாட்சி இடைத்தேர்தலில் 25 பதவிகளுக்கு 109 பேர் வேட்புமனு

நாமக்கல் மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தலில், 25 பதவிகளுக்கு போட்டியிட, 109 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2021-09-22 14:30 GMT

நாமக்கல் மாவட்டத்ததில், காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல்,  அக்.9ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனு தாக்கல், இன்றுடன் நிறைவு பெற்றது. மாவட்டத்தில்,  1 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 1 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்,  5 கிராம பஞ்சாயத்து தலைவர், 18 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த பதவிகளுக்காக ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 18 பேரும், ஒரு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 12 பேரும், 5 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 32 பேரும், 18 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 47 பேரும், என மொத்தம் 109 பேர் தங்களின் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இன்று, 22ம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள். நாளை, 23ம் தேதி மனுக்கள் ஆய்வு செய்யப்படும். 25ம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப்பெற கடைசிநாளாகும்.

Tags:    

Similar News