நாமக்கல் மாவட்ட அரசு பள்ளிகளில் கற்றல் திறன் மேம்பாடு கலந்தாய்வு

நாமக்கல் மாவட்ட அரசு பள்ளிகளில் கற்றல் திறன் மேம்பாடு குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-07-17 02:15 GMT

நாமக்கல் மாவட்ட அரசு பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் திறன்மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கற்றல், கற்பித்தலில் ஏற்பட்டுள்ள சவால்களைக் கண்டறிந்து, அவற்றிற்கு தீர்வுக காணுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் சார்பில், ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் கலந்தாலோசனைக்கூட்டம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நøடெபற்றது.

கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா தொற்று ஊரடங்கால், கற்றல் கற்பித்தலில் ஏற்பட்ட சவால்களைக் கண்டறிந்து, அவற்றிற்கான தீர்வுகளை காண்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 1 முதல், 5ம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, குறுவள மைய அளவிலும், 6 முதல், 10ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, வட்டார வளமைய அளவிலும், பிளஸ் 1, பிளஸ் 2க்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, திறன் மேம்பாட்டு கலந்தாலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டது.

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்துக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். கூட்டத்தில், பாடம் வாரியாக, தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு மற்றும் புவியியல், பொருளியல், வணிகவியல் மற்றும் கணக்குபதிவியல் ஆகிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த மாதம் எப்படி பாடம் நடத்தப்பட்டது. அதன் மூலம், மாணவர்களின் முன்னேற்றம், அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள், அவற்றிற்கு எவ்வாறு தீர்வு காணப்பட்டது என்பது குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து, இம்மாதம், எப்படி பாடம் நடத்துவது, அவற்றுக்கான துணை கருவிகள் தயார் செய்வது, கற்பித்தல் முறை, மாணவர்களுக்கு எளிமையாக கொண்டு சேர்ப்பதற்கான தயாரிப்பு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News