அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சுக்கு கொங்கு ஈஸ்வரன், எம்எல்ஏ., கண்டனம்
அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சுக்கு, கொமதேக பொதுச்செயலாள் ஈஸ்வரன், எம்எல்ஏ., கண்டனம் தெரிவித்துள்ளார்.;

இ.ஆர்.ஈஸ்ரவன், எம்எல்ஏ., கொமதேக பொதுச்செயலாளர்.
நாமக்கல்,
அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சுக்கு, கொமதேக பொதுச்செயலாள் ஈஸ்வரன், எம்எல்ஏ., கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுகவின் கூட்டணி கட்சியான, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் இ.ஆர். ஈஸ்வரன், எம்எல்ஏ., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
பொதுவெளியில் அமைச்சர் பொன்முடி பெண்களைப் பற்றி ஆபாசமாக, அநாகரிகமாக பேசியது கண்டிக்கத்தக்கது. நீண்ட அரசியல் அனுபவம் பெற்ற மூத்த அமைச்சராக இருக்கிற ஒருவர் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து கருத்துக்களை பொதுக் கூட்டத்தில் பேசியிருப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்த பேச்சு தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு பெரும் சங்கடத்தை அளித்துள்ளது. உயர் பொறுப்பில் இருப்பவர்கள் கருத்துக்களை தெரிவிக்கும்போது, எந்த ஒரு சாராரும் மனம் புண்படுகின்ற அளவிற்கு பேசக்கூடாது. யாரும் எந்த இடத்திலும் யார் கவனத்திற்கும் செல்லாது என்று நினைப்பது கூட, சமூக ஊடகங்களில் வெளியாகிவிடும் என்கின்ற கவனம் வேண்டும். அரசியல் ரீதியாக விமர்சனம் செய்வதிலோ, எதிர் கருத்துக்களை பேசுவதிலோ எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் பயன்படுத்துகிற வார்த்தைகள் ஆபாசமாகவோ, அடுத்தவர் மனதை புண்படுகிற விதத்திலோ இருக்கக் கூடாது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.