மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன்.

7 ஆண்டுகளுக்கு முன் 500,1,000 ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்டுபுதிய 2,000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன

Update: 2023-05-21 04:30 GMT

மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன்.

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்கம் செய்யும் காலத்தை, டிச. 31 வரை காலநீட்டிப்பு செய்ய வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரவை மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த, 7 ஆண்டுகளுக்கு முன், ரூ. 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களுக்கு பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டவுடன், புதிய 2,000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போதே, பொதுமக்களும், வணிகர்களும் பெரும் இடையூறுகளையும், துயரங்களையும் அனுபவித்தனர். தற்போது, திடீரென, ரூ. 2,000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இது, சாமான்ய மக்கள் மட்டும் அல்லாமல், சிறு, குறு, நடுத்தர வணிகர்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த அறிவிப்பு, பொதுமக்கள் இடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி, அவர்கள் சேமிப்பாக வைத்திருக்கும், ரூ. 2,000 நோட்டுக்கள், அன்றாட தேவைக்காக வணிகர்களிடமே புழக்கத்திற்கு கொண்டு வரப்படும். இந்நிலையில், வணிகர்கள் 2,000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கும் நிலை ஏற்படலாம். அதுபோன்ற நிலை ஏற்படும்போது, பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் சர்ச்சை ஏற்படும் சூழல் உருவாகும்.

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் 2,000 ரூபாய் நோட்டுகளை, வங்கியில் செலுத்தி, மாற்றிக் கொள்ளும் வசதிக்கான இறுதி தேதி செப். 30 என்பதை, குறைந்தபட்சம் டிச. 31 வரை கால நீட்டிப்பு அளித்தும், வங்கியில் செலுத்தும் ரொக்க மதிப்பை, ரூ. 20 ஆயிரம் ரூபாய் என்பதை, ரூ, 60 ஆயிரம் என மாற்றி அறிவித்தால், பொதுமக்களும், வணிகர்களும் பதற்றமின்றி அரசின் அறிவிப்பை கடைபிடிக்க வழிவகுக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News