நாமக்கல்லில் விவசாய மின் இணைப்பு வழங்க ஏற்பாடுகள் தீவிரம்

நாமக்கல் பகுதியில் விவசாய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் அளித்தவர்களுக்கு இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Update: 2021-09-28 06:15 GMT

பைல் படம்.

இதுகுறித்து நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழக அரசின் கொள்கை முடிவிக்கேற்ப, மாநில மின்வாரியத்தின் அறிவுரைப்படி, நாமக்கல் கோட்ட அலுவலகத்தில் பதிவு செய்துள்ள தகுதி வாய்ந்த விவசாய விண்ணப்பதாரர்களுக்கு, புதிய இலவச மின்இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. சாதாரன வரிசைக் கிரம அடிப்படையில் கடந்த 31.03.2003 முதல் 31.03.2005 வரை பதிவு செய்துள்ள தகுதி வாய்ந்த விவசாய விண்ணப்பதாரர்களுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

திருத்திய சுயநிதி திட்டம் ரூ.25,000 கட்டண அடிப்படையில் 31.03.2007 முதல் 31.03.2011 வரை விருப்பம் தெரிவித்து ரூ.500 பதிவு கட்டணம் செலுத்திய விவசாய விண்ணப்பதாரர்கள், திருத்திய சுயநிதி திட்டம் ரூ.50,000 கட்டண அடிப்படையில் 31.03.2009 முதல் 31.03.2011 வரை விருப்பம் தெரிவித்து ரூ.500 பதிவு கட்டணம் செலுத்திய விவசாய விண்ணப்பதாரர்கள் ஆகியோருக்கு, 30 நாட்கள் நோட்டீஸ் கொடுத்து, அறிவிப்பு கடிதம் மின்வாரியம் மூலம் வழங்கப்பட உள்ளது.

எனவே, மேற்கண்ட விவசாய விண்ணப்பதாரர்களுக்கு, அறிவிப்பு கடிதம் கிடைக்க பெற்றவுடன், தமது பகுதி பிரிவு அலுவலர்களை நேரில் சந்தித்து உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். கடிதம் ஏதும் கிடைக்கப்பெறாதவர்கள் உடனே மின்வாரிய அலுவலகத்தை அனுகலாம். மேலும், தட்கல் முறையில் இசைவு தெரிவிக்கும் விவசாய விண்ணப்பதாரர்களுக்கும் சிறப்பு முன்னுரிமையில் புதிய விவசாய மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News