வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி துவக்கம்

நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2022-02-11 10:15 GMT

நாமக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில், வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி துவங்கியது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகள் முனிசிபாலிட்டி மற்றும் டவுன் பஞ்சாயத்து அலுவலகங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் என 5 நகராட்சிகள் மற்றும் 19 டவுன் பஞ்சாயத்துக்கள் உள்ளன.

அந்தந்த முனிசிபாலிட்டி மற்றும் டவுன் பஞ்சாயத்து அலுவலகங்களில், வாக்குப் பதிவுக்கு தேவையான எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் நகராட்சிப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தக் கூடிய வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் அச்சிடப்பட்ட சீட்டு பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. வாக்கு சீட்டுகள் பொருத்தும் பணி நிறைவடைந்த பின்னர் மாதிரி வாக்குப் பதிவு நடத்தப்பட்டு பரிசோதனை செய்யப்படும்.

Tags:    

Similar News