மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்: கொங்கு ஈஸ்வரன்

மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கொங்கு ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-09 12:45 GMT

பட விளக்கம் : நாமக்கல்லில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அருகில் எம்.பி., சின்ராஜ்.

மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்: கொங்கு ஈஸ்வரன்

நாமக்கல், 

நடைபெற உள்ள பார்லி. தேர்தலில் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று, மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார்.

நாமக்கல் லோக்சபா தொகுதியில், திமுக கூட்டணி வேட்பாளராக கொமதே சார்பில் மாதேஸ்வரன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு திரட்டுவதற்காக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு எம்.எல்.ஏவுமான இ.ஆர்.ஈஸ்வரன் நாமக்கல் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித் பேட்டியில் கூறியதாவது:

தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு ஒரு பொது எதிரியாக பிரதமர் மோடி உள்ளார். எனவே இந்த தேர்தலில் பாஜகவை தமிழகத்திலிருந்து வீழ்த்துவோம் என திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் தெளிவாக உள்ளனர். தமிழக நலன் கருதி தேர்தலில் ஒற்றுமையாக, மோடிக்கு எதிராக ஓட்டு என்றால் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி வைக்கக்கூடும். நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை ராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு, சேந்தமங்கலம், பரமத்திவேலூர், குமாரபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளிலும், திமுக அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளன. மக்களிடையே தமிழக அரசின் திட்டங்கள் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சங்ககிரியை விரைவில் நகராட்சியாக உயர்த்த உள்ளோம்.

லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தடுமாறுகிறார். பாஜகவின் ஆட்சி எதிர்ப்பு அல்லது ஆதரவு நிலை என்பதை அறியாமல் இபிஎஸ் பேசுகிறார். பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று இபிஎஸ் இதுவரை தேர்தல் பிரச்சாரத்தில் கூறவில்லை. எனவே அவர் பாஜகவை ஆதரிக்கிறார் என்று அர்த்தம்.

மேகமலை கோடைக்கால வெப்பநிலை எப்படி இருக்கும் தெரியுமா? மேகமலைக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுபவரா நீங்கள்? அப்படியானால் அதன் வெப்பநிலையை நீங்கள் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும்.

இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும் போது டோல்கேட் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கேரளாவில் பாஜகவிற்கு சுத்தமாக வெற்றி பெற வாய்ப்பு இல்லை. இரண்டாவது இடத்திற்கு பாஜக வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் அங்கு தனித்து நிற்கின்றனர். மேற்குவங்கத்திலும் பாஜக வெற்றி பெறாது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் இண்டியா கூட்டணி வலுவாக உள்ளது. 400 க்கும் மேற்பட்ட இடங்களை வெற்றி பெறுவதாக பாஜக கூறுதில் உண்மை இல்லை.

தமிழகத்தில் விசைத்தறி, ஜவுளி தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் வீழ்ச்சிக்கு காரணம் பாஜகவின் கொள்கைதான். கோவையில் வெற்றபெற முடியாது என்ற காரனத்தால், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களோடு மோதல் போக்கில் ஈடுபடுகிறார். தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி குறைகிறது, என்பதை தெரிந்துகொண்டு, பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வருகிறார். திருப்பூரில் ஜவுளி தொழில் வளர்ச்சி அடைந்ததாக மோடி கூறியது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்த தேர்தலில் பாஜக பெரிய அளவில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பில்லை, இண்டியா கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் என ஈஸ்வரன் கூறினார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சின்ராஜ் எம்.பி., கொமதேக நிர்வாகிகள் துரை, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

Tags:    

Similar News