நாமக்கல் மாவட்டத்தில் 8 தாலுக்கா அலுவலகங்களில் ஜமாபந்தி துவக்கம்

பரமத்தி வேலூர் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற ஜாமபந்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனு பெறப்பட்டது.

Update: 2022-05-25 10:45 GMT

பரமத்திவேலூர் தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியை, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், சேந்தமங்கலம், கொல்லிமலை, ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர், மோகனூர் ஆகிய 8 தாலுக்கா அலுவலகங்களிலும் 1431 பசலி ஆண்டுக்கான, வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி துவங்கியது. பரமத்தி வேலூர் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற ஜாமபந்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். சிறுநல்லிக்கோவில், பெருங்குறிச்சி, தேவனாம்பாயைம், சுள்ளிப்பாளையம், குப்பிரிக்காபளையம், குரும்பலாதேவி, சோழசிராமணி, பெரியசோளிபாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, ஸ்மார்ட் ரேசன் கார்டு உள்ளிட்டவை தொடர்பாக மொத்தம் 36 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். பிஆர்ஓ சீனிவாசன், தாசில்தார் கண்ணன், சமூகநீதி தாசில்தார் செந்தில், மண்டல துணை தாசில்தார் சித்ரா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். சேந்தமங்கலம் தாலுக்கா அலுவலகத்தில் டிஆர்ஓ கதிரேசன் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. மற்ற 6 தாலுக்கா அலுவலகங்களிலும், சப் கலெக்டர் நிலையிலான அதிகாரிகள் மூலம் ஜமாபந்தி நிகழ்ச்சி துவங்கியது. 

Tags:    

Similar News