நாமக்கல்லில் 1 டன் குட்கா கடத்தல் மினி லாரி, சொகுசு கார் பறிமுதல:4 பேர் கைது

Govt BanTobacco Seized நாமக்கல்லில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1 டன் எடையுள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அதைக்கடத்தி வந்த மினி லாரி மற்றும் சொகுசு கார் ஒன்றையும் பறிமுதல் செய்த போலீசார், அவற்றைக் கடத்திவந்த 4 பேரை கைது செய்துள்ளனர்.

Update: 2023-11-24 07:30 GMT

Govt BanTobacco Seized

தமிழகம் முழுவதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தல், பதுக்கி வைத்தல் மற்றும் கடத்தலை போலீசார் தீவிமாக கண்கானித்து வருகின்றனர். இந்த நிலையில், நாமக்கல் நகர போலீசார் நேற்று இரவு திருச்செங்கோடு ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி சரக்கு லாரி மற்றும் சொகுசு காரை அவர்கள் சோதனை நடத்தினர்.

சோதனையின் போது மினி சரக்கு லாரியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 70 மூட்டைகளில், ஒரு டன் எடையுள்ள பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலை பொருட்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். குட்கா கடந்தி வந்த மினி லாரிக்கு பாதுகாவலாக (எஸ்கார்ட்) ஒரு சொகுசு காரும் வந்தள்ளது. அவர்களை மடக்கிப்பிடித்த போலீசார் இது குறித்து, அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சோமன் (24), அருள்ரவி (34), சிவலிங்கம் (24), வேலுகண்ணு (27) என்பது தெரியவந்தது. இதைம தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குட்கா கடத்தி மினி லாரிக்கு பாதுகாப்பாக வந்த வந்த சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனம், சொகுசு கார் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.36 லட்சம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News