வலையப்பட்டியில் என்இசிசி சார்பில் இலவச முட்டை வண்டி வழங்கல்!

வலையப்பட்டியில் என்இசிசி சார்பில் இலவச முட்டை வண்டி வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது!

Update: 2024-05-23 04:45 GMT

பைல் படம் : வலையப்பட்டியில் என்இசிசி சார்பில் இலவச முட்டை வண்டி வழங்கல்

நாமக்கல்,

வலையப்பட்டியில் என்இசிசி சார்பில் இலவச முட்டை வண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

இந்தியா முழுவதும் கோழி முட்டை விற்பனையை அதிகரிக்கும் வகையிலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கும் வகையில், நுகர்வோருக்கு மிக அருகில் முட்டை மற்றும் முட்டை உணவுகள் கிடைப்பதற்காக, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு தலைவர் அனுராதா தேசாய் முயற்சியால், பயனாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு என்இசிசி சார்பில் இலவச முட்டை வண்டிகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இதன் மூலம் முட்டை வண்டிகளைப் பெறும் பயனாளர்களின் வாழ்வாதாரமும் உயர்கிறது. தமிழக அரசு பள்ளிகளில் சுமார் 30 ஆண்டுகளாக மதிய உணவுத் திட்டத்தில் முட்டை வழங்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் பெரும்பாலும் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் முட்டை வண்டி விநியோகத் திட்டத்தின், வளையப்பட்டி பஸ் ஸ்டாப் அருகில் ஒரு பயனாளிகளுக்கு முட்டை வண்டி வழங்கும் விழா நடைபெற்றது. நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் சிங்கராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, முட்டை வண்டியை வழங்கி, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். என்இசிசி சிஓஓ டாக்டர் எழில் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். என்இசிசி மத்திய செயற்குழு உறுப்பினர்கள் வல்சன், பூபதி, நாமக்கல் வட்டார தலைவர் ஆனந்தன் உள்ளிட்ட திரளான கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் பொதுமக்கள் விழாவில் கலந்துகொண்டனர். முட்டை நுகர்வை அதிகரிக்கும் நோக்கில் பொதுமக்களுக்கு இலவசமாக முட்டை மற்றும் முட்டை உணவு வகைகள் வழங்கப்பட்டன. முட்டை வண்டியைப் பெற்றுக்கொண்ட பயனாளி புவனைஸ்வரி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாமக்கல் முட்டை வியாபாரிகள் சங்க இணைச் செயலாளர் செந்தில் குமார், என்இசிசி மண்டல உதவி பொது மேலாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News