குமாரபாளையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்த தான முகாம்

குமாரபாளையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.

Update: 2024-05-22 12:35 GMT

குமாரபாளையத்தில்  நாம் தமிழர் கட்சி சார்பில் மே 18 இன எழுச்சி நாளையொட்டி  ரத்த தான முகாம் நடந்தது.

குமாரபாளையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.

குமாரபாளையம் நாம் தமிழர் கட்சி சார்பில் மே 18 இன எழுச்சி நாளையொட்டி  ரத்த தான முகாம் மாவட்ட  செயலாளர் ராஜகோபால் தலைமையில் நடந்தது. குமாரபாளையம் அரசு மருத்துவ மனையில் நடந்த இந்த முகாமில் தலைமை டாக்டர் பாரதி பங்கேற்றார். இதில் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட 60க்கும் மேற்பட்டவர்கள் இரத்ததானம் செய்தனர். மேலும் பாசம் ஆதரவற்றோர் மையத்தில் ஒரு மாதத்திற்கான மளிகை சாமான்களை சுற்றுச்சூழல் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரமூர்த்தி வழங்க, மையத்தின் நிர்வாகி குமார் பெற்றுகொண்டார். இதில் நகர பொறுப்பாளர்கள் ராவண பிரபு, பாலு,கதிரேசன், ஜெயபாலாஜி, வீராசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவு கூறும் நாள் ஆகும். இது இலங்கைத் தமிழராலும், உலகத் தமிழராலும் ஆண்டு தோறும் மே 18 ம் நாள் நினைவு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  2009 ஆம் ஆண்டில் இந்நாளிலேயே இலங்கையின் வட-கிழக்குக் கரையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் எனும் கிராமத்தில் ஈழப்போர் முடிவுற்றது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் மத்தியிலும் மே 18 ஆம் நாளிலும் அதற்கடுத்த நாட்களிலும் இலங்கைத் தமிழர்கள் சிறிய அளவில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை, இறந்த உறவுகளை நினைத்து நினைவு கூர்ந்து வருகின்றனர். ஆனாலும், பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்வுகள் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்படுகின்றன.

புலம்பெயர் ஈழத்தமிழர் தாம் வாழும் நாடுகளில் இந்நினைவு நாளை பெரிய அளவில் கூடி நினைவுகூர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News