ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்நேயருக்கு தங்கக்கவச அலங்காரம்

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு தங்கக்கவசம் அலங்காரம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Update: 2022-01-01 11:00 GMT

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு தங்கக்கவசம் அலங்காரம் நடைபெற்றது. (அடுத்த படம்) நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் உள்ள புராண சிறப்புப் பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயிலில், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு,  வடைமாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. பல்வேறு வகையான மலர்களால் சுவாமிக்கு பூச்சொறிதல் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து சுவாமிக்கு தங்கங்கவசம் சார்த்தப்பட்டு, மகா தீபாரதனை நடபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.

Tags:    

Similar News