நாமக்கல் கலெக்டர் ஆபீசில் போஸ்டர் வடிவில் கோரிக்கை மனு கொடுத்த காந்தியவாதி

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் காந்தியாவதி ரமேஷ் போஸ்டர் வடிவத்தில் கோரிக்கை மனு அளித்தார்.

Update: 2022-06-20 10:15 GMT

நாமக்கல் கலெக்டர் ஆபீசில் போஸ்டர் வடிவில் மனு கொடுப்பதற்காக வந்திருந்த காந்தியவாதி ரமேஷ்.

நாமக்கல் மாவட்டம், மேற்கு பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தியவாதி ரமேஷ். சமூக ஆர்வலரான இவர் பல தேர்தல்களில் போட்டியிடுள்ளார். தற்போது இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கு, டெல்லி சென்று மனு தாக்கல் செய்துள்ளார். ரமேஷ் நேற்று காலை பெரிய பேனரில் கோரிக்கைகளை மனுவாக எழுதி, அதை கொடுப்பதற்காக நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பேப்பரில் எழுதி, பல முறை கோரிக்கை மனு அளித்தும் அது அதிகாரிகளின் கண்களுக்குத் தெரியாததால், கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அதனால் பெரிய போஸ்டரில் கோரிக்கைகளை மனுவாக எழுதி கலெக்டரிடம் கொடுத்துள்ளேன் என்று கூறினார். அவர் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், செல்லப்பம்பட்டி பஞ்சாயத்து பகுதியில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், ஊழல் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இது குறித்து பல முறை பல்வேறு அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு கடந்த 8 மாதங்களாக வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் அரசு நிர்ணயித்த கூலி முழுவதும் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் 150க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இது குறித்து றஏற்கனவே கலெக்டரிடம் நேரில் புகார் மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே இம்மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News