நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச ஆக்சிஜன் செறிவூட்டிகள்

வீடுகளில் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இலவச ஆக்சிஜன் செறிவூட்டிகள் ரெட் கிராஸ் சார்பில் வழங்கப்படுகிறது.

Update: 2021-08-02 10:00 GMT

ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் வீடுகளில் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இலவச ஆக்சிஜன் செறிவூட்டிகள் ரெட் கிராஸ் சார்பில் வழங்கப்படுகிறது.

இது குறித்த நாமக்கல் மாவட்ட ரெட்கிராஸ் சொசைட்டி செயலாளர் ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று தாக்கி, குறைவான பாதிப்பு உள்ள பலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சில நேரங்களில், அவர்கள் வீடுகளில் இருக்கும்போது மூச்சுவிட சிரமம் ஏற்படுகிறது. அந்த நேரங்களில் அவர்களுக்கு செயற்கையாக ஆக்சிஜன் தேவைப்படும். எ னவே அவர்கள் வீட்டில் ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரம் இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எனவே வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு, நாமக்கல் மாவட்ட ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் 10 லிட்டர் அளவிலான ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இலசமாக வழங்கப்படுகிறது. டாக்டர் பரிந்துரையின் அடிப்படையில், முன்பதிவு செய்பவர்களுக்கு வரிசைப்படி ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கப்படும். இந்த இயந்திரத்திற்கு ரூ.5 ஆயிரம் டெபாசிட் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். நோயாளிகளின் வீடுகளில் வைத்து 15 நாட்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். பின்னர் திருப்பிக் கொடுக்கும்போது டெபாசிட் பணம் திரும்ப வழங்கப்படும். இயந்திரத்தை சேதப்படுத்தினால் மட்டும், அதற்கு உரிய தொகை செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News