ராசிபுரம் பகுதி விவசாயிகள் இ-நாம் திட்டத்தில் இணைந்து பயன் பெற அழைப்பு

ராசிபுரம் பகுதி விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை இ-நாம் திட்டத்தின் மூலம் விற்பனை செய்து பயன்பெறலாம்.

Update: 2023-03-09 02:30 GMT

பைல் படம்.

ராசிபுரம் பகுதி விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை இ-நாம் திட்டத்தின் மூலம் விற்பனை செய்து பயன்பெறலாம்.

இ-நாம் திட்டம் குறித்து நாமகிரிபேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் கூறியுள்ளதாவது:

தமிழக அரசின், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்படுகின்ற நாமக்கல் விற்பனைக் குழுவில் உள்ள, நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இ-நாம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில், தற்போது விவசாயிகள் சாகுபடி செய்துள்ள, மக்காச்சோளம், நிலக்கடலை மற்றும் மஞ்சள் அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை, இத்திட்டத்தில், மக்காச்சோளம், நிலக்கடலை, மற்றும் தேங்காய் பருப்பு ஆகிய விளை பொருட்களை விற்பனை செய்து, விவசாயிகளுக்கு மொத்தம் ரூ. 11 லட்சத்து, 92 ஆயிரத்து 2 ஆயிரம் அவர்களது வங்கி கனக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் மின்ணணு தேசிய வேளான்ரமை சத்தை (இ-நாம்) திட்டத்தின் கீழ் விவசாயிகளின் விளைநிலங்களில் இருந்தபடி விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கமிஷன், போக்குவரத்து செலவு, ஏற்று கூலி, இறக்கு கூலி போன்ற செலவினங்களை தவிர்க்கலாம். மேலும் விளைபொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும். எனவே அனைத்து விவசாயிகளும் இ-நாம் திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News