ஐடிஐ தொழிற்பயிற்சியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

அரசு மற்றும் தனியார் ஐடிஐ நிறுவனங்களில் தொழிற்பயிற்சி பிரிவுகளில் சேருவதற்கு வருகிற 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-21 07:45 GMT

பைல் படம்

அரசு மற்றும் தனியார் ஐடிஐ நிறுவனங்களில் தொழிற்பயிற்சி பிரிவுகளில் சேருவதற்கு வருகிற 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ், 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ0 மற்றும் 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2023 -2024 ஆம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்களில், 2023 - 2024ம் கல்வி ஆண்டிற்கு, நேரடி சேர்க்கைக்கான (ஸ்பாட் அட்மிஷன்) கடைசி நாள் வருகிற ஆக. 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் ஐடிஐ தொழிற்பயிற்சிப் பிரிவுகளில் சேர விருப்பும் உள்ள அனைவரும், கீரம்பூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு (ஐடிஐ) நேரில் சென்று, விணப்பித்து, விருப்பமான தொழிற்பிரிவுகளை தேர்வு செய்து உடனடி சேர்க்கை பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04286-299597, 04286-247472, 9500661559, 8946095841, 9789093929 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News