சீருடைப்பணியாளர் தேர்வுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம்

சீருடைப் பணியாளர் தேர்வுக்கு முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Update: 2022-07-20 11:30 GMT

சீருடைப் பணியாளர் தேர்வுக்கு முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள தகவல்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர். ஆண்கள் 1526, பெண்கள் 654 காலி பணியிடங்கள், இரண்டாம் நிலைக் காவலர் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 1091 காலி பணியிடங்கள், சிறைத்துறையில் இரண்டாம் நிலை சிறைக் காவலர் ஆண்கள் 153, பெண்கள் 8 காலி பணியிடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பாளர் 120 காலி பணியிடங்கள் என மொத்தம் 3,552 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 5 சதவீதம் முன்னாள் படைவீரர்ககளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களை நிரப்பிட 7.7.2019-க்கு பின்னர் விடுவிக்கப்பட்ட 47 வயது மேற்டாத முன்னாள் படைவீரர்கள் மற்றும் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள படைவீரர்கள் ஆகியோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

எனவே நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 1.7.2022 அன்று 47 வயது பூர்த்தி செய்திடாத முன்னாள் படைவீரர்கள் மற்றும் 1.7.2022-க்கு பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள படைப்பணியில் உள்ள படைவீரர்கள் இப்பணியிடங்களுக்கு ஆக. 15க்குள் விண்ணப்பித்து பயனடையலாம். முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்கள் தாங்கள் விண்ணப்பித்த விபரத்தை முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு டிஎன்எஸ்யுஆர்பி.டிஎன்.ஜிஓவி.இன் என்ற வெப்சைட் முகவரியிலும், நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகியும் தெரிந்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News