எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தல்: திமுக வெற்றி

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தல் 1,439 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் வெற்றி.

Update: 2021-10-12 12:30 GMT

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் வெற்றிபெற்ற, திமுக வேட்பாளர் முத்துக்கருப்பனுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளரை விட 1439 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு 15வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் மொத்தம் 4,973 வாக்குகள் பதிவானது. அமமுக, மநீம உள்ளிட்ட மொத்தம் 8 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட முத்துக்கருப்பன் 3,135 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் விஜய்யை விட 1,439 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் விஜய் 1,696 வாக்குகள் பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்ற முத்துக்கருப்பனுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குனாளன், பிரபாகரன் ஆகியோர் அதற்கான சான்றதழை வழங்கினார்கள். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தின். எம்.பி ராஜேஷ்குமார், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News