நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியானவர்கள் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் கோர்ட்டில் உள்ள மக்கள் நீதிமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியானவர்கள் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.;
பைல் படம்
நாமக்கல்,
நாமக்கல் கோர்ட்டில் உள்ள மக்கள் நீதிமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியானவர்கள் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு, பொது பயன்பாட்டு சேவை சம்மந்தமாக பெறப்படும் மனுக்களுக்கு, தீர்வுகாண, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதியுடன் சேர்ந்து பணிபுரிய, உறுப்பினர் ஒருவர் தேர்வுசெய்யப்பட உள்ளார். அவர் போக்குவரத்து சேவை துறை (பயணிகள் அல்லது பொருட்களைக் கொண்டு செல்வதற்கான சாலை மற்றும் போக்குவரத்து துறை), தபால், தந்தி அல்லது தொலைபேசித் துறை, மின்சாரம், ஒளி மற்றும் நீர் வழங்கல் சம்மந்தமான துறை, பொது பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை, மருத்துவமனை மற்றும் மருந்தகத் துறை, இன்சூரன்ஸ் துறை, கல்வி மற்றும் கல்வி சார்ந்த நிறுவனங்கள், வீடு, மனை மற்றும் நிலம் சார்ந்த துறை போன்ற பொது பயன்பாட்டு சேவை துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ள 62 வயதிற்குட்பட்ட தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் https://namakkal.dcourts.gov.in என்ற வெப்சைட்டில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நாமக்கல் - 637 001 என்ற முகவரிக்கு 21ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேருமாறு, நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.