பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கி வைத்த ஆட்சியர் !

வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று பூத் சிலிப் வழங்கும் பணியை ஆட்சியர் துவக்கி வைத்தார்

Update: 2024-04-04 11:45 GMT

பட விளக்கம் : சேந்தமங்கலத்தில், வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று பூத் சிலிப் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் உமா துவக்கி வைத்தார்.

சேந்தமங்கலத்தில், வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று பூத் சிலிப் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் உமா துவக்கி வைத்தார்.

வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று பூத் சிலிப் வழங்கும் பணியை  ஆட்சியர் துவக்கி வைத்தார்

நாமக்கல்,

வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று பூத் சிலிப் வழங்கும் பணியை சேந்தமங்கலத்தில் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

விடாமுயற்சி ஷூட்டிங்.... எப்ப ரீலீஸ் தெரியுமா?

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாவட்ட ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். தேர்தல் பருவம் - தேசத்தின் பெருமிதம் என்ற தலைப்பில் வாக்காளர்களுக்கு 100 சதவிகிதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாக்காளர் விழிப்புணர்வு உறுதி மொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

மேலும், தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த செல்ஃபி ஸ்டேண்ட்டை பார்வையிட்டு பொதுமக்களுடன் ஆட்சியர் புகைப்படம் எடுத்து கொண்டார்.

விடாமுயற்சி ஏப் 14, மே 1... கொல மாஸ் அப்டேட்!

வரும் 19ம் தேதி அனைவரும் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடுகள் மற்றும் கடைகளுக்கு நேரில் சென்று தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், அழைப்பிதழ்கள் மற்றும் ஸ்டிக்கர்களை ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து, வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று பூத் சிலிப்புகளை வழங்கி, அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் வழங்கும் பணியை அவர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News