விடாமுயற்சி ஏப் 14, மே 1... கொல மாஸ் அப்டேட்!

விடாமுயற்சி ஏப் 14, மே 1... கொல மாஸ் அப்டேட்!
X
விடாமுயற்சி ஷூட்டிங் தாமதமானாலும், தேர்தலுக்கு பிறகு மீண்டும் தொடங்க இருப்பதாகவும் ஏப்ரல் 14 மற்றும் மே 1ம் தேதிகளில் சூப்பரான இரண்டு அப்டேட்டுகளை வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விடாமுயற்சி திரைப்படத்தில் கார் சேஸிங் சண்டைக் காட்சியில் டூப் இல்லாமல் நடித்த அஜித், அதில் விபத்து ஏற்பட்டு கார் கவிழ்ந்த வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனால் படப்பிடிப்பு தடைபட்டதா, விடாமுயற்சி திரைப்படம் தொடங்குவது காலதாமாவதற்கு இதுதான் காரணமா என ரசிகர்கள் வீடியோவை பரப்பி வருகின்றனர். இதனால் இந்த வீடியோ vidaamuyarchi behind the scenes என்ற பெயரில் வைரலாகி வருகிறது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் தொடங்கப்பட்ட திரைப்படம் விடாமுயற்சி. இது நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வருகின்றது. படம் துவங்கி ஒறு வருடத்துக்கும் மேல ஆன நிலையிலும் படப்பிடிப்பே இன்னும் நிறைவடைந்த பாடில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் கடுப்பில் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு படம் தாமதமானால் பரவாயில்லை வலிமையிலிருந்து அடுத்தடுத்த படங்கள் அனைத்தும் தாமதமாகி வருவதால் அவர்கள் கடுப்படைந்துள்ளனர்.

அஜர்பைஜானில் படப்பிடிப்பு

மகிழ்திருமேனி தலைமையிலான படக்குழு 90 நாட்கள் வரை அஜர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பை நடத்தியது. இதுவரை நடந்த படப்பிடிப்பு, விடாமுயற்சி படத்தின் 75 சதவிகிதம் ஆகும். இன்னும் 25 சதவிகித படப்பிடிப்பு பாக்கி இருக்கும் நிலையில் திடீரென படக்குழு சென்னைக்கு திரும்பியது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நிதி இல்லாமல் இருப்பதே முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. அடுத்தடுத்த படங்கள் தாமதமாகிக் கொண்டே இருப்பதாலும், அவரது போட்டியாளரான விஜய் அடுத்தடுத்து பல படங்களில் நடித்துக் கொண்டே இருப்பதாலும் கடுப்பான அஜித் ரசிகர்கள் லைகா நிறுவனத்தை திட்ட ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில், இன்று காலை முதலே விடாமுயற்சி அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாக டிராக்கர்கள் பலர் பதிவிட்டு வந்தனர். அதேநேரம் விடாமுயற்சி குறித்த எந்த அப்டேட்டும் வராததால் ரசிகர்கள் கோபமடைந்தனர். விடாமுயற்சி ஹேஸ்டேக்குடன் சேர்த்து அஜித்குமார், குட்பேட்அக்லி ஆகிய பெயர்களையும் டிரெண்ட் செய்தனர். இந்நிலையில், அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது டிவிட்டர் கணக்கில் மூன்று வீடியோக்களை வெளியிட்டார். அதில் விடாமுயற்சி ஷூட்டிங் வீடியோக்கள் இருந்தன.

தமிழ் புத்தாண்டு அப்டேட்

ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் மீண்டும் துவங்க இருப்பதாகவும் அதனை முன்னிட்டு படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிடுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளன.

மே 1 அப்டேட்

உழைப்பாளர் தினம் மற்றும் அஜித்குமார் பிறந்த நாளான மே 1ம் தேதி விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை வெளியிடும் திட்டத்தில் இருக்கிறார்கள். பர்ஸ்ட் லுக் போஸ்டர் மோஷன் போஸ்டர் வடிவத்திலும் அடுத்து செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

கார் சேஸிங் வீடியோ

கார் சேஸிங் சண்டைக் காட்சியில் அஜித்குமார், ஆரவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆரவ்வை வைத்துக் கொண்டு அஜித் காரில் பயங்கர வேகத்தில் பயணிக்கிறார். இதனால் நிலை தடுமாறி விழுவதாக அந்த காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது. ஜீப் பயங்கர வேகத்தில் கீழே விழுந்து புரண்டு எழுந்து நிற்பதாக அந்த காட்சி இருக்கிறது. இந்நிலையில், இதனால்தான் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அஜித்குமார் இப்படி ரிஸ்க் எடுத்து படம் நடிக்க வேண்டியது இல்லை. ஏன் இப்படி செய்கிறார் என ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர். அவரது உடல் நலத்தை முதலில் பார்க்கட்டும் பின் சினிமாவில் நடிக்கட்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். ஆனால் அஜித்தோ பைக், கார் சேஸிங் காட்சிகளிலேயே டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நடிக்கிறார்.

விடாமுயற்சி ரிலீஸ் தேதி

அஜித்குமாரின் விடாமுயற்சி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். மேலும் அர்ஜூன், ஆரவ் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர மேலும் பல நடிகர்கள் இந்த படத்தில் இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் 25 சதவிகித எஞ்சிய காட்சிகளைப் படம்பிடிக்க காத்திருக்கிறது படக்குழு. விடாமுயற்சி திரைப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

அதேநேரம் வரும் மே மாதம் அஜித்குமார் தனது அடுத்த படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முதல் அஜித் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!