பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாமக்கல்லில் சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2021-07-06 12:00 GMT

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, நாமக்கல்லில் சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் சந்திசேகரன் தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட செயலாளர் வேலுச்சாமி போராட்டம் குறித்து விளக்கிப் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். சாலைப் பாதுகாப்பு சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் வாழ்வாதாரம் பாதுக்காக ரூ. 7,500 மதிப்பில் உணவு தானியம் வழங்க வேண்டும். வாகன இன்சூரன்ஸ் பிரிமியத்தை உயர்த்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் சுரேஷ், சங்க மாவட்ட துணைச் செயலாளர் சிவராஜன், மாநிலக் குழு உறுப்பினர் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்து கெண்டனர்.

Tags:    

Similar News