விவசாயிகளின் பயிர்கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடனை தள்ளுபடி செய்யகோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

Update: 2021-08-16 10:45 GMT

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். 

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஏஐகேஎஸ் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். இதில் கடந்த ஆட்சிக் காலத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடந்த ஜனவரி 31ம் தேதி வரை விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் ஏராளமான குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக 2021 ம் ஆண்டு தை பொங்கலுக்கு ரேசன் கார்டுதாரர்களுக்கு ரூ. 2 ஆயிரம் மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து எடுத்து கொடுக்கப்பட்டதால் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் முதலே புதிதாக பயிர்க்கடன் கேட்டு விண்ணப்பித்த தகுதியான விவசாயிகளுக்கு கூட கடன் கொடுக்க பணம் இல்லாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக விண்ணப்பித்தவர்களின் ஆவணங்கள் ஏற்கப்பட்டு கடன் தொகை கொடுக்காமல் கடனின் ஒரு பகுதியான உரம் மட்டுமே வழங்கப்பட்டது.

இதற்கிடையே கடந்த அரசு அவசர கதியால் அறிவிக்கப்பட்ட பயிர் கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பால் மேற்கண்ட விவசாயிகள் பயன் பெற முடியாத நிலை ஏற்பட்டு இன்று வரை பாதிப்புக்குகயுள்ளள்ளாகி வருகின்றனர். மேலும் கொரோனோ பெரும் தொற்று காரணமாக விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு உரிய விலை இல்லாமலும் அறுவடை செய்த பொருட்களை விற்பனை செய்ய முடியாமலும் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆகவே ஜனவரி 31ம் தேதிக்கு பின்னரும் கடன் தொகை பெற்ற விவசாயிகளின் நிலைமையையும் கருத்தில் கொண்டு அனைத்து பயிர்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதில்ஏஐகேஎஸ் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஏளாளமானோர் பங்கேற்றனர்.

 

Tags:    

Similar News