மின் கட்டண உயர்வை குறைக்க கோரி தொழிற்சங்க மைய மாநாட்டில் தீர்மானம்

Tamil Electric Bill -மின் கட்டண உயர்வை குறைக்க கோரி தொழிற்சங்க மைய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-09-19 05:00 GMT

நாமக்கல்லில் ஏ.ஐ.டி.யு.சி. மாநாடு நடந்தது.

Tamil Electric Bill - நாமக்கல் மாவட்ட, இந்திய தொழிற்சங்க மையத்தின் 8வது மாநாடு நாமக்கல்லில் நடைபெற்றது. சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் அசோகன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் செங்கோடன் கொடியேற்றி வைத்தார். வரவேற்புக்குழு தலைவர் முருகேசன் வரவேற்றார். சிஐடியு மாநில செயலாளர் உதயகுமார் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

பாண்டிச்சேரியைப் போல், தமிழகத்திலும், கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் போனஸ் வழங்க வேண்டும். அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் பொங்கல் பரிசு தொகை வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் போதிய வருவாய் இல்லாததால் வாங்கிய கடனை கட்ட முடியாத நிலையில் கந்துவட்டி கும்பலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை, 20 ஆயிரம் மாத சம்பளம், 60 வயது முதல் மாதம் ரூ. 3000 ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். சிறு குறு தொழில்களை பாதுகாக்க மின் கட்டண உயர்வை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும், மாதம்தோறும் மின் கணக்கெடுப்பு நடைமுறையை அமல்படுத்த வேண்டும். பள்ளிபாளையம்.குமாரபாளையம் வெப்படை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் விசைத்தறி உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு 75 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும். விசைத்தறி தொழிலுக்கு 750 யூனிட் இலவசமாக மின்சாரம் வழங்குவது போல் தையல் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வில் மாவட்டதலைவராக அசோகன், செயலாளராக வேலுசாமி. பொருளாளராக ரங்கசாமி, துணை தலைவர்களாக ஜெயகொடி, கோவிந்தராஜன், செங்கோடன். கண்ணன், ஜெயராமன், வரதராஜ், துணைச் செயலாளர்களாக மோகன், சிவராஜ், சுரேஷ், முத்துக்குமார், ரேவதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News