ராகுல் காந்தியை அவதூறாக சித்தரிப்பு: நாமக்கல்லில் காங்., ஆர்ப்பாட்டம்

ராகுல்காந்தியை 10 தலை ராவணனாக சித்தரித்த பா.ஜ.க.வை கண்டித்து, நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-10-07 02:30 GMT

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவதூறாக சித்தரித்ததை கண்டித்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை 10 தலை ராவணனாக சித்தரித்த பா.ஜ.க.வை கண்டித்து, நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எம்.பியை, 10 தலை ராவணனாக சித்தரித்த பாஜகவை கண்டித்து, தமிழகம் முழுவதும் பாஜக அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிவிப்பு செய்திருந்தார். நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி அளிக்காததால், நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் தலைமை வகித்தார். நகர தலைவர் மோகன், முன்னாள் மாவட்ட தலைவர் சீனிவாசன், முன்னாள் மாநில மாணவர் அணி தலைவர் டாக்டர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராகுல் காந்தியை கேலி செய்து சித்திரம் தீட்டியதை கண்டித்தும், டில்லியில் பத்திரிக்கையாளர்களை கைது செய்ததை கண்டித்தும் போராட்டத்தில் கோஷம் எழுப்பினர். வட்டார காங்கிரஸ் தலைவர்கள் தங்கராஜ், சிங்காரம், ஜெகநாதன், மாநில, மாவட்ட, நகர, டவுன் பஞ்சாயத்து நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News