கொரோனா பரவலை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரம்: கலெக்டர் பங்கேற்பு

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மாவட்ட கலெக்டர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.

Update: 2021-08-03 06:00 GMT

நாமக்கல்லில் கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற்ற, கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சுகாதாரமாக கைகழுவும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

நாமக்கல் : 

கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மாவட்ட கலெக்டர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவும் அபாயம் உள்ளதால், அதைக்கட்டுப்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்துள்ளார். கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, நாமக்கல் பார்க் ரோட்டில், நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க கை கழுவும் முறைகள் குறித்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உறுதிமொழியை வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர். பின்னர், கைகழுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்தல் குறித்து சுகாதாரப் பணியாளர்கள் விளக்கம் அளித்தனர். பின்னர் நாமக்கல் பஸ் நிலையத்தில் கடை உரிமையாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், பஸ் பயணிகள் உள்ளிட்டவர்களுக்கு மாஸ்க்குகள் மற்றும் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சிகளில் நாமக்கல் சப் கலெக்டர் கோட்டைக்குமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம், பிஆர்ஓ சீனிவாசன், நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம், தேசிய நலக்குழும தொடர்பு அலுவலர் ரங்கநாதன், தாசில்தார் திருமுருகன், ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News