முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டி: 18ம் தேதி பரிசளிப்பு விழா

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 18ம் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

Update: 2023-06-13 03:15 GMT

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 18ம் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச. உமா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், நாமக்கல் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என 5 பிரிவுகளாக தனித்தனியே நடத்தப்பட்டது.

இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை, சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் விழா வரும் 18ம் தேதி காலை 8.30 மணிக்கு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலை அரங்கில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் நடைபெறும் விழாவில், தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பேசுகின்றனர்.

ஏற்கனவே நடைபெற்ற போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெற்ற வீரர்கள், வீராங்கணைகள் தவறாது பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும். நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலிருந்து, மருத்துவ கல்லூரி வரை பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 97100 63634 என்ற எண்ணில் கால்பந்து பயிற்சியாளர் நடராஜமுருகனை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News