பள்ளி மாணவியை கடத்திய கல்லூரி மாணவர் போக்சோவில் கைது

பள்ளி மாணவியை கடத்திச் சென்ற கல்லூரி மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து, மாணவியை மீட்டனர்.

Update: 2023-03-05 00:53 GMT

பைல் படம்.

பள்ளி மாணவியை கடத்திச் சென்ற கல்லூரி மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து, மாணவியை மீட்டனர்.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுக்கா, மஞ்சநாயக்கன்ஹள்ளி அருகில் உள்ள, அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் மனோஜ்குமார் (22). அவர், நாமக்கல், கனவாய்ப்பட்டியில் உள்ள, அறிஞர் அண்ணா அரசு கலைகல்லூரியில், மூன்றாம் ஆண்டு பி.பி.ஏ., படித்து வந்தார். அவர் கல்லூரிக்கு அருகில் உள்ள குடியிருப்பில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். அவர் தங்கியிருந்த பகுதியில் வசித்த 15 வயது மாணவி மாணவி, அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கல்லூரி மாணவர் மனோஜ்குமாருக்கும் அந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த கடந்த, பிப். 17 ம் தேதி, இரவு முதல் பள்ளி மாணவி திடீரென மாயமானார், அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், அக்கம், பக்கம், உறவினர்கள் மற்றும் மகளின் தோழியர் வீடுகளில் தேடிப் பார்த்தனர். பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை.

இதனால், இது குறித்து அவர்கள் மோகனூர் போலீசில் புகார் செய்தனர். புகாரில், தங்களது மகளை யாரோ கடத்தி சென்றுவிட்டதாக தெரிவித்திருந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இது தொடர்பாக, நாமக்கல் கலெக்டரிடம், மாயமான தங்களது மகளை உயிருடன் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர்கள் புகார் மனு அளித்தனர். கலெக்டர் உத்தரவின்பேரில் போலீசார் தீவிரமாக மாணவியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில், ஓசூர் பகுதியில், பள்ளி மாணவியை கடத்திச் சென்ற கல்லூரி மாணவர் மனோஜக்குமாரை கண்டு பிடித்த போலீசார், அவரிடம் இருந்து பள்ளி மாணவியை மீட்டனர்.

இதைத் தொடர்ந்து, 15 வயது பள்ளி மாணவியை கடத்திச் சென்ற கல்லூரி மாணவர் மனோஜ்குமார் மீது, போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர். மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் அவர் ரிமாண் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News