நாமக்கல் பழைய அரசு ஆஸ்பத்திரியில் சித்த மருத்துவமனை அமைக்கும் பணி; கலெக்டர் ஆய்வு

Namakkal news- நாமக்கல் நகரில் உள்ள பழைய அரசு ஆஸ்பத்திரியில், சித்த மருத்துவமனை அமைக்கும் பணியை ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-04-30 09:15 GMT

Namakkal news- நாமக்கல் நகரில் உள்ள பழைய அரசு ஆஸ்பத்திரியில், சித்த மருத்துவமனை அமைக்கும் பணியை, மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Namakkal news, Namakkal news today- நாமக்கல் நகரில் உள்ள பழைய அரசு ஆஸ்பத்திரியில், சித்த மருத்துவமனை அமைக்கும் பணியை ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல்லில் இருந்து, திருச்சி மாவட்டம் முசிறி வரை ரூ. 104.54 கோடி மதிப்பீட்டில், இருவழி சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சாலை வலுப்படுத்துதல், சாலையின் மேற்பரப்பை மேம்பாடு செய்தல், சிறுபாலங்கள் அகலப்படுத்துதல், கூடுதல் பாலம் கட்டுதல், மிகவும் சிறுபாலங்கள் அகலப்படுத்துதல் மற்றும் திரும்பக் கட்டுதல், தடுப்புச் சுவர் கட்டுதல் மற்றும் கட்டுமானங்கள் நிறைந்துள்ள பகுதியில் வடிகால் வசதி செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகள் மூலம் 12 கிராமங்களை சேர்ந்த சுமார் 24,000 பொதுமக்கள் பயன்பெறுவார்கள். ஒரு சில இடங்களில் பணிகள் முடிவுற்றுள்ளன. சில இடங்களில் பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், 75 மீ நீளத்திற்கு கிணற்று பாதுகாப்பு சுவர் அமைத்தல், 2,920 மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, 31,372 மீ நீளத்திற்கு குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணிகளில் 20,127 மீ நீளத்திற்கு குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணிகளும், 191 மின்கம்பங்கள் மாற்றியமைத்தல் பணிகளில் 142 பணிகளும், 8,500 எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நடும் பணிகளில் 6,500 மரக்கன்றுகள் நடும் பணிகளும் முடிவுற்றுள்ளன. சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விரைவில் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

முன்னதாக, நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள பழைய அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் 60 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவமனை பிரிவு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆட்சியர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட உள்ள நோயாளிகளுக்கான வசதிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News