திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியருக்கு கலெக்டர் பரிசு வழங்கல்

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியருக்கு, பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

Update: 2022-03-09 08:00 GMT

பைல் படம்.

உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை, பள்ளி மாணவர்கள், இளம் வயதிலேயே அறிந்து கொண்டு, கல்வி அறிவோடு, நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில், தமிழக அரசால், திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2019–20ம் ஆண்டு முதல், ஆண்டு தோறும் 1,330 திருக்குறள்களையும் ஒப்புவிக்க மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், திருக்குறள் முற்றோதல் போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில், மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ. 10 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனனர் முன்னிலையில், திருக்குறள் முற்றோதல் போட்டி நடைபெற்றது.

போட்டியில், நாமக்கல் தனியார் பள்ளியில், 3ம் வகுப்பு படிக்கும் மாணவி அனன்யா, திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவி ஓவியா ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவியருக்கு, கலெக்டர் ஸ்ரேயாசிங் தலா ரூ.10 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் (பொ) ஜோதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News