கோவை பில்லூர் அணையை உடனடியாக தூர்வார வேண்டும்: கொங்கு ஈஸ்வரன் வேண்டுகோள்

Namakkal news- கோவை மாவட்டம் பில்லூர் அணையின் நீர் மட்டம் குறைந்துள்ளதால், உடனடியாக அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொங்கு ஈஸ்வரன் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2024-04-30 09:00 GMT

Namakkal news- கொமதேக பொதுச்செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன், எம்எல்ஏ.,

Namakkal news, Namakkal news today- கோவை மாவட்டம் பில்லூர் அணையின் நீர் மட்டம் குறைந்துள்ளதால், உடனடியாக அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொங்கு ஈஸ்வரன் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்ஏவுமான ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கின்ற பில்லூர் அணையில் இந்த ஆண்டு நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. தற்போது உள்ள நிலையில், அணையில் 43 அடி தண்ணீர் மட்டும் இருப்பதாக தெரிகிறது. அணையில் ஏற்கனவே 33 அடி வரை மண் நிரம்பி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். குடி தண்ணீருக்கான மாற்று ஏற்பாடுகளை விரைவாக அரசு செய்ய வேண்டுமென்று, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டம் நடத்த துவங்கியுள்ளனர். இந்த பிரச்சினையில் தமிழக அரசு விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதே சமயத்தில் தண்ணீர் குறைவாக உள்ள இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, உடனடியாக பில்லூர் அணையை தூர்வாரி, அணைக்குள் நிரம்பி இருக்கின்ற மண்ணை அகற்ற வேண்டும். இதன் மூலம் மழை பெய்யும்போது அணையின் தண்ணீர் கொள்ளவை கணிசமாக உயர்த்த முடியும். குடி தண்ணீருக்கான மாற்று ஏற்பாடு எவ்வளவு முக்கியமோ அதே அளவு அணையை தூர்வாருகின்ற பணியும் முக்கியமானது. எனவே தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தூர்வாரும் பணியை துரிதப் படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News