நாமக்கல் அரசு மருத்துவமனையில் தூய்மை பணி: கலெக்டர் ஆய்வு

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தூய்மை இயக்கத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் துவக்கி வைத்தார்.

Update: 2022-04-21 11:45 GMT

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை இயக்கத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் துவக்கி வைத்தார்.

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தூய்மை இயக்கத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்.

நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில், நம்ம மருத்துவமனை தூய்மையான மருத்துவமனை இயக்கத்தின் கீழ் என்எஸ்எஸ் மாணவர்கள் மூலம் பூங்காக்களை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து தூய்மைப் பணியை துவக்கி வைத்து பேசியதாவது:

பொதுமக்கள் அனைத்து மருத்துவ சேவைகளுக்காகவும் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை பெரிதும் சார்ந்துள்ளார்கள். பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் இந்த இடங்கள், சுகாதாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதால், சுத்தம் சுகாதாரத்தை மிக முக்கியமாக கடைபடிக்க வேண்டும். இதற்காக நம்ம மருத்துவமனை தூய்மையான நல்ல மருத்துவமனை என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில், நாள் ஒன்றுக்கு 3 முறை வரை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும். மருத்துவமனையின் சுற்றுப்புறத்தையும், தூய்மையாகவும், குப்பைகள் இன்றியும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தாமலும் இருக்க வேண்டும் என்று கூறினார்.

இதனடிப்படையில் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி என்எஸ்எஸ் மற்றும் ரெட்கிராஸ் அமைப்பை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பூங்காக்கள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். இந்த பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, பேராசிரியர் சுரேஷ்கண்ணா, நிலைய மருத்துவர் கண்ணப்பன், ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News