குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 130 நிறுவனங்கள் மீது வழக்கு

குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 130 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2024-01-28 05:45 GMT

பைல் படம்

நாமக்கல் மற்றும் ஈரோடு பகுதிகளில் குடியரசு தினத்தன்று, விதிமுறையை பின்பற்றாமல், தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திய 130 நிறுனங்கள் மீது தொழிலாளர் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேசிய விடுமுறை தினமான ஜன.26 குடியரசு தினத்தன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என சட்ட விதி உள்ளது. அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த வகையில் நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் உத்தரவின் பேரில், நாமக்கல் மாவட்டம் மற்றும் சங்ககிரிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் வணிக நிறுவனங்ள் மற்றும் தொழில் கூடங்களில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

மொத்தம் 68 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது 23 கடை நிறுவனங்கள், 32 ஹோட்டல்கள் என 55 நிறுவனங்களில் விதிமுறையை பின்பற்றாமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து அந்நிறுவன நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோல் ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத ௭௫ கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது தொழிலாளர் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News