நாமக்கல்லில் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் பிறந்த நாள் விழா

namakkal news, namakkal news today- நாமக்கல்லில் லோக்ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

Update: 2023-07-05 07:00 GMT

namakkal news, namakkal news today- நாமக்கல்லில் நடைபெற்ற, லோக்ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் பிறந்த நாள் விழாவில், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

namakkal news, namakkal news today- நாமக்கல் மாவட்ட லோக் ஜனசக்தி சமார்பில், கட்சியின் நிறுவனரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, ராம்விலாஸ் பஸ்வானின் 77வது பிறந்த நாள் விழா நாமக்கல் மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது.

லோக் ஜனசக்தி மாவட்ட தலைவர் பிரபு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, ராம் விலாஸ் பஸ்வானின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நாமக்கல் நகர லோக் ஜனசக்தி தலைவர் தங்கராஜ், நகர செயலாளர் மகாலிங்கம், நாமக்கல் மாவட்ட மகளிர் அணி தலைவி ரஞ்சனி, பொருளாளர் பாரதி உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் சேகர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News