நாமக்கல் நகராட்சி கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் பயன்படுத்தப்பட்ட, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் நகராட்சி மூலம் பறிமுதல் செய்ப்பட்டது.

Update: 2021-12-22 01:30 GMT

நாமக்கல் நகராட்சிப் பகுதியில், கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கமிஷனர் சுதா பார்வையிட்டார்.

தமிழக அரசு,  ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் போன்ற பொருட்களை தடை செய்துள்ளது. தடையை மீறி சில கடைகளில் இந்தப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதையொட்டி நாமக்கல் நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளை நகராட்சி கமிஷனர் சுதா தலைமையில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் இருந்த, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவற்றை பயன்படுத்திய கடை உரிமையாளர்களிடம் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Tags:    

Similar News