கொல்லிமலைக்கு சுற்றுலா வந்த பெங்களூர் வாலிபர் உயிரிழப்பு

கொல்லிமலைக்கு சுற்றுலாவந்த பெங்களூரைச் சேர்ந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-02-02 01:15 GMT

கொல்லிமலைக்கு சுற்றுலாவந்த பெங்களூரைச் சேர்ந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆகாயகங்கை, நம்ம அருவி, மாசிலா அருவி போன்ற நீர் வீழ்ச்சிகளுக்கு சென்று குளித்து மகிழ்வது வழக்கம்.

கர்நாடக மாநிலம் பெங்களூர் விஜயா நகரை சேர்ந்தவர் பரத் (28), என்பவர் அங்குள்ள ஓட்டல் ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. பரத் தனது நண்பர்கள் 4 பேருடன் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தார். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த அவர்கள் சுமார் 1,400 படிக்கட்டுகளில் இறங்கி ஆகாயகங்கை நீர் வீழ்ச்சிக்கு சென்று குளித்தனர்.

பின்னர் படிகளின் வழியே மேலே ஏறிக் கொண்டிருந்தனர். அப்போது, பரத்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரது நண்பர்கள் அவரை, செம்மேடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கொல்லிமலை வாழவந்திநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News