நாமக்கல் கோயிலில் மாலை அணிந்து விரதம் துவக்கிய ஐயப்ப பக்தர்கள்

கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி நாமக்கல் ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கினார்கள்.

Update: 2021-11-17 11:07 GMT

நாமக்கல் ஐயப்பன் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து செல்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் சபரிமலை செல்ல முடியவில்லை. இந்த ஆண்டு  தினசரி 50 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்து சபரிமலைக்கு சென்று வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டவர்கள், 24 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதணை செய்து அந்த சான்றிதழுடன் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து திரும்பி வரலாம்.

நாமக்கல் ஐயப்பசாமி அறக்கட்டளை சார்பில், மோகனூர் ரோட்டில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், கார்த்திகை 1ம் தேதியை முன்னிட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து யாக பூஜைகள் நடந்தது. பின்னர் சாமிக்கு தீபாராதணை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, திரளான ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டு குருசாமியிடம் மாலை அணிந்து விரதத்தை துவக்கினார்கள். அவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து சபரிமலை சென்று தரிசனம் செய்ய உள்ளனர்.

நாமக்கல் ஐயப்பன் கோயிலில் தினசரி சிறப்பு பூஜைகள் மற்றும் பஜனை நடைபெறும். முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு கோயில் வளாகத்தில், மாலை போடுதல், இருமுடி கட்டுதல் ஆகியன தொடர்ந்து நடைபெறும் என்று அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News