நாமக்கல்லில் வரும் 20ம் தேதி அரங்கநாதர் புதிய திருத்தேர் வெள்ளோட்ட விழா

நாமக்கல் அரங்கநாதர் கோயில் புதிய திருத்தேர் வெள்ளோட்டம் வரும் 20ம் தேதி நடைபெறுகிறது.

Update: 2022-05-15 06:30 GMT

வெள்ளோட்டத்திற்கு தயார் நிலையில் உள்ள நாமக்கல் ஸ்ரீ அரங்கநாதர் திருத்தேர்.

நாமக்கல் மலையின் கிழக்குப்புறத்தில், மெயின் ரோடு பகுதியில் ஸ்ரீ அரங்கநாதர் கோயில் குடைவறைக் கோயிலாக அமைந்துள்ளது. இங்கு கார்கோக்கடகன் என் பாம்பின் மீது மூலவர் அரங்காநதர் அனந்த சயன நிலையில் உள்ள சிலை மலையைக்குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் பங்குனி மாதத்தில் ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ அரங்கநாதர், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆகிய முப்பெரும் தேரோட்டம் சிறப்பாக நடைபெறும். 3 தேரும் உருவாக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியுள்ளன. இதனால் பழுதடைந்த நிலையில் இருந்த நரசிம்மர், ஆஞ்சநேயர் கோயில் தேர் கள் ஏற்கனவே புதுப்பிக்கப்பட்டு, இந்த ஆண்டு நடைபெற்ற பங்குனி விழாவின் போது தேரோட்டம் நடைபெற்றது.

பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் இருந்த அரங்கநாதர் கோயில் தேரை, இந்து சமய அறநிலையத்துறை மூலம், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில்தேர் புதுப் பிக்கும் பணி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. திருவண்ணாமலையைச் சேர்ந்த ஸ்தபதி தண்டபாணி தலைமையில், 45 மரச்சிற்பக் கலைஞர்கள் புதிய தேரை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த ஆண்டு பங்குனி தேர்த்திருவிழாவின்போது தேர் அமைக்கும் பணி நிறைவடையாததால் அரங்கநாதர் தேர் ஓடவில்லை.

தற்போது புதிய தேர் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, வரும் 20ம் தேதி வெள்ளிக்கிழமை, ஸ்ரீ அரங்காநதர் உற்சவ மூர்த்தி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் தேரில் எழுந்தருளி வீதியுலா வரும் வகையில் வெள்ளோட் டம் நடைபெறும். அன்று காலை 6.30 மணிக்கு நடைபெறும் விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன், அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் கண்ணன், கலெக்டர் ஸ்ரேயாசிங், எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வி, எம்பிக்கள் ராஜேஷ்குமார், சின்ராஜ், எம்எல்ஏ ராமலிங்கம், நகராட்சித்தலைவர் கலாநிதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வெள்ளோட்டத்தை துவக்கி வைக்கின்றனர். தொடர்ந்து முக்கிய வீதிகளின் வழியாக தேர் வெள்ளோட்டம் நடைபெறும். கோயில் துணை கமிஷனர் ரமேஷ், தக்கார் அன்னக்கொடி ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Tags:    

Similar News