விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பம் செய்தோருக்கு வரும் 21ம் தேதி சிறப்பு முகாம்

நாமக்கல் மாவட்டத்தில், விவசாய மின் இணைப்புக்காக விண்ணப்பித்தவர்களுக்கு, மின்சார வாரியத்தின் சார்பில் வரும் 21-ஆம் தேதி முதல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Update: 2022-01-10 02:30 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில், விவசாய மின் இணைப்புக்காக விண்ணப்பித்தவர்களுக்கு, மின்சார வாரியத்தின் சார்பில் வரும் 21-ஆம் தேதி முதல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் விவசாய மிøன் இணைப்பு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில் ராசிபுரம் கோட்டத்தில் வரும் 21-ம் தேதியும், பரமத்திவேலூர் கோட்டத்தில் 24ம் தேதியும், நாமக்கல், திருச்செங்கோடு கோட்டத்தில் 25-ம் தேதியும் மின்வாரிய அலுவலகத்தில், விவசாய மின் இணைப்பு குறித்து சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பித்தவர்கள் பெயர் மாற்றம், சர்வே எண் உட்பிரிவு, சர்வே எண் மாற்றம் ஆகியவை மேற்கொள்வதற்கு இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பெயர் மாற்றத்திற்கு இறப்பு சான்று, வாரிசு சான்றிதழ், பங்குதாரரின் ஆட்சேபனை இல்லை என்பதற்கான கடிதம், வருவாய் அலுவலரின் சான்று ஆகியவை கொண்டு வரவேண்டும். சர்வே எண் உட்பிரிவு மாற்றத்திற்கு, வருவாய் அலுவலர் சான்று, வரைபடம், சர்வே எண் மற்றும் கிணறு மாற்றத்திற்கு பழைய மற்றும் புதிய வருவாய் அலுவலர் சான்று, வரைபடம் ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டும். இம்முகாம்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News