நாமக்கல்லில் பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி; கலெக்டர் பங்கேற்பு

Namakkal news- நாமக்கல்லில் நடந்த பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியில் கலெக்டர் பங்கேற்றார்.

Update: 2023-12-18 07:15 GMT

Namakkal news- நாமக்கல்லில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு எதிரான, விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் உமா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Namakkal news, Namakkal news today- நாமக்கல்லில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.

பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு என்பது, பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடத்தப்படும். பாலியல் வன்கொடுமைகளை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து சமூகத்திற்கும், தனிநபர்களுக்கும் கற்பித்தல், பாலியல் வன்முறையை ஒழித்தல் இதன் நோக்கமாகும்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள, சமூகம் சார்ந்த அமைப்புகள், அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் போன்றவற்றில் நடைபெறும் பாலியல் வன்முறையை பொது சுகாதாரம், மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி பிரச்சினையாக முன்னிலைப்படுத்தவும், தடுப்பு முயற்சிகளின் தேவையை வலுப்படுத்தவும் இந்த பிரச்சாõரம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு தேசிய அளவிலான இந்த பிரச்சாரம் நவ. 25 முதல் டிச. 23 வரை நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகம் சார்பில், நாமக்கல் மாவட்டதில் பாலியல் வன்கொடுமைக்கு ஏதிரான பிரச்சாரப் பேரணி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து துவங்கியது. மாவட்ட கலெக்டர் உமா கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.

இந்த பேரணியில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் பிரியா அவர்கள், உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஓருங்கிணைப்பாளர்கள், மற்றும் திரளான சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News